சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! குண்டாஸ் போடப்படுமா? என தலைப்பிட்டு கடந்த 8 ம் தேதி செய்திகள் வெளயிட்டு இருந்தோம், இன்று அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்டம் பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் (மே 10) பதிவு செய்த நிலையில், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த ஆவணங்களை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அவதூறு வழக்கில் யூ-டியூபா் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து தனது யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சியிலும் பெண் போலீஸாா் புகார் அளித்திருந்த நிலையில், சவுக்கு சங்கரைத் தொடா்ந்து யூ-டியூபா் பெலிக்ஸ் ஜெரால்டும் நேற்று (மே 11) கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இனி யூடியூப்பில் கடுமையான பிரச்னை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.