வீடியோ வெளியிட்ட யூட்யூபர் சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்..

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி,  வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில்,  ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வைக்க,  ஜமாத் மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன், ஏப்ரல் 27-ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்றும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பதாகவும் நவாஸ் கனி சார்பில் சாட்டை துரைமுருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், நோட்டீஸ்க்கு பதில் அளிக்காவிடில் சாட்டை துரைமுருகன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!