ராமநாதபுரம் தனியார் மகாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் 137 இளைஞர்கள் தன்னார்வமாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகியும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவம் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.