நிலக்கடலை மகசூல் அதிகரித்தும் ஊரடங்கு உத்தரவால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாததால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையில் நிலக்கடலை அதிக அளவு மகசூல் கிடைத்தும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர், திருமயானம், சிங்கானோடை , கருவி பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலையில் முன்பு நிலக்கடலை மூட்டை 2500 முதல் 2800 வரை விற்பனையாகியுள்ளது தற்போது 2000 முதல் 2300 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மேலும் பெரிய வியாபாரிகள் வாங்கி மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், என் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம் ஆனால் பெரிய வியாபாரிகள் வாங்க முன்வராததால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் நிலக்கடலை முட்டை தேக்கம் அடைந்துள்ளது வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தமிழக அரசு கொள்முதல் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என நிலக்கடலை விவசாயிகள் மற்றும் இதை நம்பி வாழும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை  செய்தியாளர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!