கொரோனா வைரஸிலிருந்து போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இராஜபாளையம் பகுதி காவலர்களுக்குகு யோகா பயிற்சி..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் அமுதா இராஜபாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டு அதில் பாதிக்கப்பட்டவர்கள் முழு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் மற்றும் இராஜபாளையம் நகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்காகவும் நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பத்மாசனம் உள்ளிட்ட பல வகை ஆசனங்கள் அளிக்கப்பட்டது. குறிப்பாக உப்பு கலந்த மிதமான சுடு நீரால் வாயைக் கொப்பளிப்பது, முகத்திற்கு ஆவி பிடித்தல் மிதமான சுடுநீரை பருகுதல், சூரிய ஒளி குளியல் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவு வகை பட்டியல் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி மற்றும் யோகா ஏற்பாடுகளை இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர்  நாகசங்கர் செய்திருந்தார். இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

பேட்டி: டாக்டர் அமுதா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!