உலகம் முழுவதும் மே 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமான கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி கீழக்கரை நகராட்சி சார்பாக புகையிலையின் தீமையை விளக்கி விழிப்புணர்வு ஏற்பாடு செய்யபட்டது.

இப்பேரணி கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் மற்றும் அனைத்து நகராட்சி அலுவலர்களின் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

இப்பேரணியில் புகையிலையின் தீமையை விளக்கும் வண்ணம் பதாககைகளை ஏந்தியபடி கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் தொடங்கி அனைத்து தெருக்களிலும் நகராட்சி ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். “புகையிலை இல்லா குடும்பம் நலமான குடும்பம் ” “புகையிலை ஒரு உயிர்கொல்லி நோய்” “புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்” “புகையிலையை ஒழிப்போம் உயிரை காப்போம்” என்ற வாசகங்கள் பொருத்திய பதாகைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிகழ்வை நகராட்சி துப்பரவு பணி ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஒருங்கிணைப்பில் நகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை தொடாந்து நிகழ்த்துவது மூலம் மக்கள் மத்தியில் தீய செயல்கள் பற்றிய நல்ல விழிப்புணர்வு ஏற்படும்.

ஆனால் தீமை என்ற பொருளை அறிந்தும் விற்பனை செய்வதும் அதை வருமானத்திற்காக ஊக்கப்படுத்தும் அரசாங்கமும் சிந்தித்தால் இதற்கு நிலையான தீர்வு ஏற்படும்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









