26 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த திருமங்கலம் சிறுவன்…

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் &  வேல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பில் இன்று (6-04-2019) காலையில் நடைபெற்ற தனிநபர்  மாரத்தான்    நிகழ்ச்சியில்,  13 வயது சிறுவன் செல்வன் ச.நிரஞ்சன், 25 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் golden book of world records உலக சாதனை படைத்துள்ளார் !

இம்மாணவர் 26 கிலோமீட்டர் தூரத்தை 2மணி 21 நிமிடங்களில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இம்மாணவரின் உலக சாதனையை திருமங்கலம் ரோஸ் அரிமா சங்க தலைவர் அரிமா K.முரளிதரன்,   பட்டயத் தலைவர் அரிமா. V. பால்ராஜ், வேல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் திரு.V.முனி ராஜ் ,திருமங்கலம் இலக்கியப் பேரவையின் செயலாளர் திரு.சு.சங்கரன், அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் , Record Manager திரு. இராகேஷ் வைத் கண்காணிப்பில் இவ்வுலக சாதனை நடைபெற்றது. உலக சாதனை படைத்த  பிகேஎன். மேல் நிலைப்பள்ளி மாணவன் செல்வன் ச.நிரஞ்சனுக்கு திருமங்கலம் இலக்கியப் பேரவையின் சார்பில் வாழ்த்துகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் திருமங்கலம் இலக்கிய பேரவை செயலாளர் சங்கரன் தெரிவித்தார்.

செய்தி  வி.காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!