மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம்.
உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.
பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையதோ, அதேபோல மனநோயும், தூக்கமின்மையும் நெருங்கிய கூட்டாளிகள் எனலாம்.
தூக்கமின்மை காரணமாக உடல் சூடு உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட, அதிக நாட்கள் அல்லது ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும் என்பது உறுதி.
பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. அது அதிகரித்தாலோ அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு அதனால்தான் தூக்கமின்மைக்கும், மனோவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது.
பொதுவாக மனநோய் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்படுவது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.
மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக – போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90 சதவீத குணம் ஏற்பட்டு விடும்.
மனநோய் என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.
*மனநோயின் அறிகுறிகள்!*
மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.
நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.
ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.
குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது.
ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.
சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால் அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம்.
மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.
நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ – தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.
மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.
இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.
அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்தம் இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.
முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும். அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.
மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.
நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.
You must be logged in to post a comment.