உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
இயற்கையில் விலங்குகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம். அவை பல தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, விதைகளின் விநியோகம், மண் உருவாக்கம் ஆகியவற்றில் பங்கேற்கின்றன. இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்களை அழிப்பதில், நீர்த்தேக்கங்களை சுத்தம் செய்வதில் விலங்குகள் பங்கேற்கின்றன. உயிரியக்கவியல் மட்டுமல்ல, மனித வாழ்க்கையிலும் விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், மருந்துகளின் தாக்கம், சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஒரு உயிரினத்தின் எதிர்வினை ஆகியவற்றைப் படிக்கின்றன. விலங்குகள் உழைப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் மனித உதவியாளர்கள். இறுதியாக, இவர்கள் “குறைவான சகோதரர்கள்”, மனிதனின் நண்பர்கள். மனிதன் சுமார் 40 வகையான விலங்குகளை அடக்கி வளர்த்தான்.
இருப்பினும், மனித வாழ்க்கையில் விலங்குகளின் எதிர்மறையான பங்கு மிகவும் வேறுபட்டது. அவை விவசாய தாவரங்கள், உணவுப் பொருட்கள், தோல், கம்பளி மற்றும் மரப் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கின்றன. பல விலங்குகள் பல்வேறு நோய்களை (மலேரியா, வயிற்றுப்போக்கு, அஸ்காரியாசிஸ் போன்றவை) ஏற்படுத்துகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் விலங்குகள் அழிக்கப்பட்டு அன்றாட பொருட்கள், மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பல உயிரினங்கள் அழிந்து வருவதோடு, அரிய வகையாகவும் இருந்து வருகின்றன. குறிப்பாக, நாம் அரிதாக பார்க்கும் எறும்புத்திண்ணி வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவைகள் மட்டுமல்ல. யானை, புலி, சிங்கம் உள்ளிட்ட உயிரினங்களும் ஆண்டுதோறும் அதிகளவில் இறந்து வருகின்றன. தான்சானியாவில் கடந்த 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2014ம் ஆண்டு 43 ஆயிரமாக சரிந்துள்ளது. இவைகள் தந்தங்களுக்காக அதிகளவில் கொல்லப்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மட்டும் 40 ஆயிரம் புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேட்டை முதலிய பல காரணங்களாலும் தொடர்ந்து உலகெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 1973ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின்படி புலிகள் காப்பகம் அமைத்து, புலி வேட்டையினை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்பிறகே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.
ஏற்கனவே வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. விலங்குகளின் மறைவிடமாவும், இருப்பிடமாகவும் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது வேதனையான விஷயம். வனத்தில் மரங்கள் அழிப்பது, மழைவளத்தை அழிப்பதற்கு சமம். விலங்குகளை அழிப்பது வனம், மனித இனத்தின் பாதுகாப்பை அழிப்பதற்கு சமம். எனவே, விலங்குகளை காப்போம்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









