உலக ரத்த கொடையாளர் தினம்..இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இரத்த தான முகாம்..

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் பரமக்குடி கல்வி மாவட்ட JRC (Junior Red Cross)  சார்பாக ரத்த தான முகாம் பரமக்குடி A.V. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ரத்த தான முகாமினை ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் தலைமையில் பரமக்குடி ஜூனியர் ரெட் கிராஸ் துணைத் தலைவர் டாக்டர் ராமதாஸ் துணைச்சேர்மன் கதி சண்முகம் முன்னிலையில் பரமக்குடி வட்டாட்சியர் என். பரமசிவம் துவக்கி வைத்தார். பரமக்குடி கல்வி மாவட்ட JRC கன்வீனர் எஸ். அலெக்ஸ் வரவேற்றார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். ஜஸ்டீன் ஞானசேகர் மற்றும் பரமக்குடி வட்டாட்சியர் ஆகியோர் ரத்த தானத்தின் அவசியம் பற்றி உரையாற்றி ரத்த தானம் செய்ய வந்துள்ள 40க்கும் மேற்பட்ட JRC கவுன்சலர்களான ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் B.K. நவனீத் தலைமையில் அவரது குழுவினர் 50 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். JRC கவுன்சலர் எஸ். பெர்னாடிட் நன்றி தெரிவித்தார். மாவட்ட ரெட் கிராஸ் ரத்த தான பிரிவு அமைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!