பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!- தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) நன்றி அறிக்கை..
இது தொடர்பாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறையோடும் கரிசனத்தோடும் நடந்து கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் மீண்டும் உதவித்தொகையினை அதிகரித்து அரசாணை வெளியிட்டது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது.
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) களமாடி,உழைத்து, வெற்றி பெறச்செய்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக, பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாம் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- வழங்கப்படும்.10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், செய்தி தொடர்பு துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” சார்பாகவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என நன்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவன்:
ஜெ.அஸ்கர்;
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்..
You must be logged in to post a comment.