மாலை முரசு “டிவி” இருட்டடிப்பு! “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கடும் கண்டனம்!

மாலை முரசு “டிவி” இருட்டடிப்பு “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்”கடும் கண்டனம்! “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி. இளையராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது! நேற்றிரவு மாலை முரசு டிவி கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் எனவும் அமோக இடங்களை பிடித்து திமுக வெல்லும் எனவும். சொற்ப இடங்களை பிடித்து அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தையும் இழக்க நேரிடலாம் என்றும். கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவை வீழ்த்தி வெற்றி பெறுவார் தினகரன் எனவும் ஜனநாயக முறைப்படி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கருத்து கணிப்பை வெளியிட்ட காரணத்திற்காக மாலை முரசு டிவி அரசு கேபிளில் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும் கருத்து கணிப்பு வெளியிடுவது அவரவர் உரிமை களத்தில் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டுமே தவிர இது போன்ற செயல்களால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை உடனடியாக அரசு கேபிளில் மாலை முரசு டிவியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமது கண்டன அறிக்கையில் கூறியுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!