தமிழகமெங்கும் கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் முழுவதும் குணமடைந்து நோயின்றி வீடு திரும்பி வருகின்றனர். ஒருபுறம் தூய்மை காவலர்களின் பணி தினந்தோறும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது துப்புரவு காவலர்கள் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை தடுப்பூசிகள் போடும் பணி அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூய்மை பணிகளைப் பாராட்டி அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பாதுகாவலர்கள் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன இந்நிலையில் உத்திரங்குடி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக் அவர்கள் வழிநடத்தலில் உத்திரங்குடியில் ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளித்து வீடு வீடாக பிளிச்சிங் பவுடர் தூவியும் வீதிகளை தூய்மையாக பாதுகாப்பாகவும் இருக்கும்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களுக்கு பரிசோதனையும் 6️ மாதத்திற்கு ஒருமுறை போடும் தடுப்பூசியும் தூய்மை காவலர்களுக்கு போடப்பட்டது. இதேபோன்று ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை தடுப்பூசிகள் போடும் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம மக்களும் தற்போதைய ஆட்சியானஆஇஆதிமுகவையும் சிறப்பான முறையிலும் ஆட்சிபுரிந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை வெகுவாக பாராட்டியும் வாழ்த்தியும் வணங்கியும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












