மு.வெள்ளத்தாய்.வாள் வீச்சு பயிற்சி பெற்று சிறந்த வீராங்கணையாக திகழ்பவர். இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம்.பயின்று வரும் மாணவி ஆவார். இவரது தந்தையார் ஐஸ் விற்கும் ஏழைத் தொழிலாளி ஆவார்.
இந்த மாணவி அகில இந்திய அளவில் வாள்வீச்சு போட்டியில் 3-தங்கப்பதக்கங்கள் உட்பட பல விருதுகள் பெற்று தன் ஏழைப் பெற்றோருக்கும், பாளையங்கோட்டைக்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அதனையும் தாண்டி தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அனைவரும் இந்த மாணவியை பாராட்டி வருகின்ற வேளையில் சர்வதேச மகளிர் தினமான இன்று தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பாரதி முருகன் ஆகியோர் முன்னிலையில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர்.கவிஞர் பே.இராஜேந்திரன், (தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர், திருநெல்வேலி) அவர்களால் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.