மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் மகளிர் தின விழா .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண் ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது

விழாவுக்கு கல்லூரி நிர்வாக இணை அறங்காவலர்  ஞானசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி. தம்பு.  சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

சிறப்பு விருந்தினர்களாகவும் விருது பெறுபவர்களாகவும் மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி. சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திரா தாமோதரன். தொழிலதிபர்அகிலா பாஸ்கர். பாடகர் ஸ்ரீநிதா. விளையாட்டு வீராங்கனை தனுஸ்ரீ. பேராசிரியர்கள். கனிமொழி. தீபாவர்த்தினி. தலைமை ஆசிரியர் சுகுணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர் கல்லூரி முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்

கல்லூரி நிர்வாக அறங்காவலரும் சமூக ஆர்வலமான ஞானசேகரன் மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் அவர் தனது வாழ்த்துரையில் பெண்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில் , நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு உலகம் உன் வசப்படும், என்று வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றோர்கள் தங்களது மகளிர் தின சிறப்பு உரையில், பெண்கள் தங்கள் கனவுகளை தொடரவும், இலக்குகளை அடையவும், சுதந்திரமான உலகத்தை உருவாக்க வேண்டும் . தங்களின் உரிமைகளில் காக்க விழிப்பாக இருக்க வேண்டும் . கல்வி உட்பட பல துறைகளில் சென்று சாதிக்க வேண்டும் . வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் தாயாகவும் சகோதரியாகவும் தோழியாகவும் ஆசிரியையாகவும் இந்த சமுதாயத்தில் முக்கிய முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று சிறப்புரை ஆற்றியதுடன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் நிகழ்ச்சியின் முடிவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!