மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று 08.03.17 மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள ஏர்வாடி காவல் நிலையம், கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு காலமாக, தனியார் இடங்களில் உள்ள வாடகை கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டதால் காவலர்களும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் மகளிர் தினமான இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், கீழக்கரை காவல் நிலைய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு DSP மல்லிகா மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









