ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதல் தளத்தில், கைபிடி சுவரின் விளிம்பில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் அமர்ந்து கைபேசியில் கவனமாக பேசிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடத்தின் உயரத்தையும்,கைபிடி சுவற்றின் குறுகலான அமைப்பையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவிதமான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் அவர் அமர்ந்திருந்தது பார்ப்பவர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. சிறிது நிலை தடுமாறினாலும் அவர் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.நல் வாய்ப்பாக அவர் எந்தவித காயமும் இன்றி தப்பினார். இது போன்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழும் ஆபத்துகளையும் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.
மேலும், நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக உயரமான இடங்களில் அமர்ந்திருக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அலைபேசியில் பேசும்போது சுற்றுப்புறத்தை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பல விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, அலைபேசியைப்பயன்படுத்தும்போது பாதுகாப்பான இடத்தில் நின்று அல்லது அமர்ந்து பேசுவது மிகவும் முக்கியம்.
இதுபோன்ற அலட்சியமான செயல்களைத் தவிர்த்து, நம்முடைய பாதுகாப்பை நாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள். இந்த சம்பவம்மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். முன் எச்சரிக்கையே நம்மை காக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.