லோன் கேட்டு மிரட்டும் தனியார் நிறுவனங்கள்;மகளிர் சுய உதவி குழு பெண்கள் பரிதவிப்பு:-தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பெண்கள் வேண்டுகோள்…
தென் மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களில் அதிக அளவு பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலைவி, செயலாளர் உள்பட சுமார் 15 பெண்கள் இடம் பெறுகின்றனர்.. இவர்கள் தங்களுடைய குடும்ப தேவைகளுக்காக ஆசிர்வாதம்,, புது விடியல் உள்பட பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் குறைந்த வட்டியில் கடன் வாங்கி உள்ளனர். இதற்காக வாரம், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் என்ற அடிப்படையில் தவணை செலுத்தி வருகின்றனர். இந்த குழுவில் உள்ள ஒரு பெண் தவணை கட்ட முடியாவிட்டால் மற்ற உறுப்பினர்கள் சேர்ந்து தவணை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் லோன் வழங்கபடுகிறது. இந்த பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் வசூலித்து செல்கின்றனர். தீபாவளி, பொங்கல் உள்பட எந்த பண்டிகை தினமாக இருந்தாலும் விதி விலக்கு அளிக்க மறுப்பதால் பெண்கள் கட்டாயம் லோன் செலுத்த வேண்டும். அவர்களிடம் பணம் இல்லாத பட்சத்தில் சில பெண்கள் வேறு வழியின்றி கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கி லோன் கட்டுகின்றனர். எக்விடாஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் லோன் விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதில்லை. தற்போதைய சூழலில் 21 நாட்கள் கொரோனோ வைரஸ்க்காக ஊரடங்கு நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் தினக்கூலி பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானம் இன்றி பணம் புரட்ட தடுமாறுகின்றனர். ஆனால் ஊரடங்கு நிலையிலும் லோன் கட்டியே தீர வேண்டும் பெண்களை சில மைக்ரோ பைனான்சு நிறுவனங்கள் மிரட்டி வருகின்றன. இதனால் சில பெண்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று புலம்புகின்றனர். கொரோனோ பிரச்னை முடியும் வரை பைனான்சு நிறுவனங்கள் லோன் வசூலிக்க தடை விதிக்க தமிழக அரசு அறிக்கை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுய உதவி குழு பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









