இராமநாதபுரம், செப்.15- இராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5,430 மகளிருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி இன்ற துவக்கி வைத்தார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) செ.முருகேசன் (பரமக்குடி) ராம.கருமாணிக்கம் திருவாடானை) (ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பெண்களுக்கான பிரத்யேக ஏடிஎம் கார்டிடு வழங்கினார் அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000/- மாதந்தோறும் வழங்க அறிவித்திருந்தார். அவர் சொன்னது போல் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்து வைத்துள்ளார் . பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய அரசாக திமுக இருந்து வருகிறது. பெண்களுக்கு சொத்துரிமை திட்டத்தை முதன்முதலாக பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் மு.க கருணாநிதி பெண்களுக்கு திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி என பல்வேறு திட்டங்களை கலைஞர் வழங்கினார். அவர் வழியில் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- நிதியுதவி, படித்த பெண்களுக்கு நாள் முதல்வன் திட்டத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை வழங்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஒவ்வொரு திட்டமும் பிற மாநில முதல்வர்களே பாராட்டும் வகையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பிற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் 1 கோடியே 6 லட்சம் மகளிர் பயன்பெறும் சிறப்ப வாய்ந்த இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலை கடைகள் மூலம் 3,18,048 குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்திருந்தார் விண்ணப்பித்தவர்களின் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை பெற்றிடும் வகையில் இத்திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. 5,430 பெண்களுக்கு உரிமை தொகைக்கான பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பித்து தகுதியான பெண்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். கிடைக்க பெறாதவர்களுக்கு அதற்குரிய காரணம் விண்ணப்பதாரர்களின் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தகவல் வரும். அதை அறிந்து மீண்டும் அதற்குரிய விடுதல்களை சரி செய்து இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த பயனாளிகள் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பதே தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணம் ஆகும். என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜூலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசை வீரன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முத்துக்குமார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழங்க அலுவலர் நாராயணன், உணவு பொருள் வழங்கல் துறை தாசில்தார் தமீம் ராசா, நகராட்சி துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.டி.பிரபாகரன், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாள் கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்ச் செல்வி போஸ், மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் கே.இ.நாசர்கான், பரமக்குடி நகராட்சி தலைவர் சேது.கருணாநிதி, புத்தேந்தல் ஊராட்சி தலைவர் கோபிநாத், சாயல்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குலாம் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









