திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா  நம்புதாளை அருகே ‘சம்பை’ கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி ராணி (35) இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை எனவும், தானும் தனது பிள்ளைகளும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாத் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திருவாடானை  தாசில்தார் அலுவலகத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு  அறிவுறுத்தியதாக சொல்லப் படுகிறது. இதனையடுத்து,  இன்று  தாசில்தார் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சந்திக்க  வந்த போது அவரது இடத்துக்குரிய பட்டா வேறு ஒருவர் பெயரில் இருப்பதாகவும் அவர் திமுக பிரமுகர் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

முறைகேடாக திமுக பிரமுகர் ‘சந்தனம்’ என்பவர் போலி ஆவணங்களை கொடுத்து, தனக்கு சொந்தமான இடத்தை அவரது பேரில் மாற்றி வைத்துள்ளதை அறிந்து அதை திருத்தம் செய்து தனது பெயருக்கு மாறுதல் செய்து பாதை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்திய போது ஆளுங்கட்சி பிரமுகர்  மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுத்ததாக  சொல்லப்படுகிறது.

இதனால் வேதனயடைந்த அவர், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மறுத்ததால் தனது மகளுடன் தாலுகா அலுவலகம் வந்தவர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளிக்க  முயன்றுள்ளார். உடன் அங்கு இருந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவாடாணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!