நிருபர்களை தரக்குறைவாக நடத்திய வேப்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து WJUT- WORKING JOURNALIST UNION OF TAMILNADU – தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன், மற்றும் தினமலர், செய்தியாளர்களை வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தகாத வார்த்தைகளால் திட்டியும், தரதரவென இழுத்துச் சென்று குற்றவாளிகளை நடத்துவது போல காவல் நிலையத்தில் கீழே அமருமாறும் கூறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கக்கூடிய வேதனைக்குரிய செயலாகும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத அளவிற்கு, வேப்பூர்
காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
வேப்பூர் ஆய்வாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நமது சங்கத்தின் சார்பாக காவல் துறை தலைவர் இடத்தில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் புவனேஸ்வரியை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை கோரியும் மாவட்டம் தோறும் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









