கீழை நியூஸ் நிறுவனம் மற்றும் சத்திய பாத இதழின் குழுமத்திற்கு WJUT யின் நன்றி நன்றி.!

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. ஜெ. சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தஞ்சாவூர் மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் WJUT யின் தென் மண்டல செயலாளர் மறைந்த திருஞானம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது சொந்த ஊரான நரியனூர் கிராமத்திற்கு சென்றிருந்தோம்,

25வருட அனுபவம் கொண்ட பத்திரிகையாளன், நேர்மையாளன், அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,சட்டமன் உறுப்பினர் மற்றும் ஊரே கொண்டாடிய ஒரு மனிதன் திருஞானம். ஆனால் அவரை கிடத்திவைக்க இடம் இல்லை,எப்போது இடிந்து விழும் என்கிற அளவில் ஒத்த விளக்கு எரியும் ஒரு குடிசை வீடு அவரின் நேர்மையை பத்திரிகை அறத்தை காட்டுகிறது.!ஊரெல்லாம் நல்ல பெயர் எடுத்த ஓரு பத்திரிகையாளனின் சவத்தை எடுக்க கூட காசு இல்லை,அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லை,பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தில் ஓளி இல்லை,அந்த ஆண் பிள்ளைக்கு இன்பம் இல்லை ஆனால் நட்பாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவோம்..!காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தின் மானப்பெரிது.

ஏழ்மையின் வாயிலில் வறுமையின் பிடியில் தந்தை எனும் ஏணியை இழந்து ஏதுமறியாமல் வாடி நிற்கும் நம் சகோதரனின் குடும்பத்திற்கு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் உதவிகள் செய்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டோம்.இந்த இந்த செய்தியை அறிந்த சத்தியப்பாதை இதழின் ஆசிரியரும் கீழை நியூஸ் நிறுவனத்தின் நிறுவனருமான திரு செய்யது ஆபிதீன் அவர்கள் மறைந்த திருஞானம் குடும்பத்திற்கு உடனடியாக பண உதவி செய்து உள்ளார்கள். அந்த குடும்பத்தின் சார்பாகவும் நாங்கள் சார்ந்த சங்கத்தின் சார்பாகவும் திரு சையது ஆபிதீன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..!  இவன் -தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநிலச் செய்தி தொடர்பாளர்.ஜெ, அஸ்கர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!