மண்டல டேக்வாண்டோ போட்டி : தங்கம் வென்றார் இராமநாதபுரம் மாணவர் …

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 2018-2019 கல்வியாண்டிற்கான   மண்டல அளவிலான டேக் வோண்டா  போட்டி இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 500 பேர் பங்கேற்றனர். நேஷனல் அகாடமி  பள்ளி தாளாளர் டாக்டர்  செய்யதா, முதல்வர் ராஜ முத்து துவக்கி வைத்தனர். சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி, தேசிய நடுவர் பாஸ்கரன், மாவட்ட நடுவர்கள்  சங்கர் குமார் (கன்னியாகுமரி), இராமநாதபுரம் நடுவர்கள் கர்ணன், ரமேஷ்பாபு, ராஜா ரமேஷ், முகமது உசேன்  ஆகியோர் பணியாற்றினர். காலையில் நடந்த 19 வயது 45 கிலோ எடைப்பிரிவு  முதல் போட்டியில்  இராமநாதபுரம் நேஷனல் பள்ளி  பிளஸ் 1 மாணவர் கு.அபினேஷ் சர்மா  முதலிடம் பிடித்து தங்கம் வென்று  மாநில அளவிலான  போட்டிக்கு தகுதி பெற்றார். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் டிசம்பர்  4,5,6  தேதிகளில் திருப்பூர் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

இன்று (28.11.18) நடந்த மண்டல அளவிலான  டேக் வோண்டாபோட்டியில் வீரர்கள் பெறும் புள்ளியை மதிப்பிட முதல்முறையாக எலக்ட்ரானிக் ஸ்கோர் சிஸ்டம் (ESS ) எனும் மதிப்பெண் எலக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தப்பட்டது. அபிராமம் முஸ்லிம் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்  உசேன், உடற்கல்வி  இயக்குநர் அன்சாரி   ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!