அண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டியில் முதல் பரிசும் ஒட்டு மொத்த கண்காப் சியில் வெற்றிக் கோப்பையும் வென்று சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்திருக்கிறது. கடந்த 11-1-19 அன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ROBOTZ INDIA என்ற நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டியில் முதல் பரிசும், over all presentatian ல் winner Cup ம் பெற்றனர் மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி (57வது பிளாக்) மாணவர்கள்
மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகணேசன் அவர்கள் நேற்று (19-1-19) காலை பள்ளி வளாகத்தில் அவர்களை பாராட்டி கோப்பையும், பதக்கங்களும் வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் சாதனை புரிய வழிகாட்டிய அறிவியல் ஆசிரியர் மேனகா அவர்களையும் பாராட்டினார்.
இது குறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூறுகையில்:- தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர உதவும் தலைமை ஆசிரியர் செல்வ கணேசன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்ட நகரின் சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வளர்களுக்கும் எங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். சாதனை படைத்த மாணவர்களை அரசும், கல்வி அமைச்சரும் ஊக்கப்படுத்த வேண்டும் , இதன் மூலம் மாணவர்கள் மேலும் உற்சாகமடைவார்கள் என கூறினர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









