மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்ன செம்மேட்டுபட்டியில் 5586 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.,
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபான கடைக்கு சமீப காலமாக மது அருந்த வருவோர் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் பெண்களை கேழி செய்வது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் அடிக்கடி பிரச்சினைகளும் எழுந்து வருவதாக குற்றச்சாட்டுகின்றனர்.,
இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத சூழலில் இன்று மது பான கடை முன்பு கிராம மக்கள் ஒன்றிணைந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கடையை மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.,
You must be logged in to post a comment.