மதுரையில் பெண்கள் உரிமைக்காக திரண்ட இஸ்லாமிய பெண்கள்..

இன்று (20-12-2017) விமன் இந்தியா மூவ்மென்ட் ( WOMEN INDIA MOVEMENT) சார்பாக மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் பெண்கள் கண்டன போராடட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தனர். கேஸ் விலை உயர்வு, மானியம் வழங்குவதில் இழுத்தடிப்பு GST வரி விதிப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ரேசன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு மற்றும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்க விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மாவட்ட தலைவர் கதீஜா பீவி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வின் கண்டன உரையை மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொதுச் செயலளாரும், நேசனல் விமன்ஸ் பிரன்ட் (NWF) மாநில பொதுச்செயரலாளர் ஆசியா மர்யம் ஆகியயோர் வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்புரையை விமன் இந்தியா மூவ்மென்ட மாநில தலைவர் நஜ்மா பேகம் வழங்கினார்.

இப்போராட்டத்தின் போது பெண்களுக்கு தற்போதயை ஆளும் அரசுகளின் மீது உள்ள வெறுப்பையும், அதிருப்தியையும் தெளிவாக காண முடிந்தது. இப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக அல்லாமல் ஒட்டு மொத்த பெண்களின் குரலாகவே ஒலித்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!