கீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..

கீழக்கரையை முதன்மை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு நிறுவனம் “கீழக்கரை கிளாசிஃபைட்” நிறுவனம்.  இதன் நிறுவனர் SKV.சேக் சில வருடங்களுக்கு முன்பு பகுதி நேர சேவையாக தொடங்கியவர், பின்னர் இச்சேவை மீதுள்ள ஆர்வ மிகுதியால் முழு நேரமாக கடந்த பல வருடங்களாக செய்து வருகிறார்.
இவரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக சமீபத்தில் புதிய தலைமுறை விருது, ரோட்டரி கிளப் விருது, சிகரம் 2018 போன்ற விருதுகள் மற்றும் இன்னும் பல விருதுகள் இந்தியா மற்றும் அமீரகத்தில் பெற்றுள்ளார்.
இதன் வரிசையில் இவரின் சேவைக்கு கூடுதல் மதிப்பளிக்கும் விதமாக “WILL MEDALS NATIONAL RECORD” நிறுவனம்  சார்பாக, கடந்த 7 வருடத்தில் சமூக வலைதளங்கள் மூலம் 39,238 சேவை விளம்பரங்கள் பரப்பியதற்காக “WILL MEDALS NATIONAL RECORD” மற்றும் “ MUGAVAI RECORDS” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விருதை SKV.சேக் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன் கைகளில் இருந்து பெற்றார்.  இந்த நிகழ்வின் போது அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் Y.நூருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவருடைய பணி மென்மேலும் சிறந்து இன்னும் பல சமூகப்பணிகள் செய்ய கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!