இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் …புகைப்பட தொகுப்பு..

இராமநாதபுர்ம் முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் சார்பாக 26/07/2018 அன்று மாலை 3.00 மணியளவில் இளம் சாதனையாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.  முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் நிறுவனர் – தலைவர் ஆ.கலைவாணி  மற்றும் செயலர் சீ.தஹ்மீதா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர் சங்கம் தலைவர் ரவிச்சந்திர ராமவள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் Prof.Dr.கஜீதா நாச்சியார், கீழக்கரை தட்டாந் தோப்பு தெருவைச் சார்ந்த சிறுவன் V.ஹஸ்வ பிரனவ், கீழக்கரை கிளாசிஃபைட் SKV.சேக் ஜெய்னுலாப்தீன், M.உலகராஜ் ஆகியோர் சாதனைக்கான முகவை ரெகார்ட்ஸ் அங்கீகார சான்றிதழ்  பெற்றனர்.

அதைத் தொடர்ந்து கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த சிறுமி H.F வஃபா மரியம், GREEN GLOBE நிறுவனம், கீழக்கரை கிளாசிஃபைட் SKV.சேக் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் சாதனைக்கான வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் அங்கீகார சான்றிதழ் பெற்றனர்.

இதில் கீழக்கரை கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த சிறுமி H.F வாஃபா மரியம், இச்சிறிய பருவத்தில் பல வகையான காசுகளை சேகரித்து சாதனை படைத்துள்ளார்.  கீழக்கரை தட்டாந் தோப்பு தெருவைச் சார்ந்த சிறுவன் V.ஹஸ்வ பிரனவ் இந்த இளம் வயதில் பல வகையான யோகாசனங்கள் செய்து சாதனை படைத்துள்ளார்.

அதே இரு விருதுகளையும் பெற்றுள்ள கீழக்கரை கிளாசிஃபைட் SKV.சேக் ஜெய்னுலாப்தீன்,  வேலை வாய்ப்பை வழங்கும் வண்ணம்  37,000கும் மேலான பதிவுகளை சமூக தளங்களில் பதிந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தமைக்கு பெற்றுள்ளார். 

அதே போல் GREEN GLOBE நிறுவனத்தின் யாஸ்மின் அபூபக்கர் வளைகுடா மக்களின் மேம்பாடு மற்றும் கேன்சர் போன்ற நோய்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருவமைக்காகவும், ஆசிரியர் M.உலகராஜ் பொம்மலாட்டம் மூலம் 4000கும் மேலான ஆசிரியர்களுக்கு பயிற்றுவித்தமைக்கும், Prof.Dr.கஜீதா நாச்சியார் அக்குபஞ்சர் துறையில் சிறந்த சேவை புரிவதை அங்கீகரிக்கும் வகையில் அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகவை ரெகார்ட்ஸ் என்பது முகவை மாவட்ட அளவில் சாதனை புரிபவர்களை அடையாளம் காணவும், வில் மெடல்ஸ் ரெகார்ட்ஸ் தேசிய அளவில். சாதனை புரியும் நபர்களை அடையாளம் காட்ட கொடுக்கப்படும் அங்கீகார சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!