நேர்மையாளர் உ.சகாயம் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களிலும் 04-11-2018 அன்று ஒரு மணி நேரத்தில் 1,43,850 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
இந்த மாபெரும் சாதனையை அங்கீகரித்து வில் மாநில சாதனை விருது மக்கள் பாதைக்கு வழங்கப்பட்டது. இந்த உயரிய விருதினை வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் தலைவர் கலைவாணி, செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் வழங்கினர்.
மக்கள் பாதையின் மாபெரும் சாதனை விருதை இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன் குமார், நூருல் அமீன், சரவணக்குமார் மற்றும் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ், வீரக்குமார், ராஜ்கபூர், சிலம்பரசன் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை கிளாசிபைடு நிறுவனர் சேக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாநிலம் முழுவதும் பனை விதை விதைப்பு நிகழ்வை ஒருங்கிணைத்த பனை விதை குழு பொறுப்பாளர்கள் வட சென்னை மணி, திருவள்ளூர் முத்துக்குமார், இராமநாதபுரம் நூருல் அமீன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.



You must be logged in to post a comment.