தமிழகத்தின் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் ஜெய் ஜஸ்வந்த். 10 வயதாகும் இச்சிறுவன் ஜஸ்வந்த் இதுவரை பல்வேறு நீச்சல் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார்.
இந்த சிறுவன் கடந்த 28.3.2019 அன்று தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையை 10 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
1994 ஆம் ஆண்டு குற்றாலீசுவரன் நீச்சலில் புரிந்த உலக சாதனையை இந்த சிறுவனின் இந்த புதிய சாதனையானது முறியடித்துள்ளது. இந்த சிறுவனின் இந்த புதிய உலக சாதனையானது வில் உலக சாதனை ஆய்வு மையத்தால் அங்கீகரிக்கப்பட்டுஅந்தச் சிறுவனுக்கு வில் மெடல்ஸ் உலக சாதனையாளர் பட்டமானது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கீழை நியூஸ் தளத்தில் வெளியிட்ட செய்தி:- https://keelainews.in/2019/03/28/achievement-3/


You must be logged in to post a comment.