ஐந்து மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பு இராமநாதபுரம் பி.எட்., மாணவி சாதனை…

இராமநாதபுரம் அருகே R.K.சாமி கல்வியியல் கல்லூரியில் B.Ed முதலாம் ஆண்டு மாணவி ஷாலினி Mugavai Records & Will State Records ஆகியவற்றில் இடம் பிடிப்பதற்கு ஒரு வித்யாசமான சாதனை முயற்சியை செய்து அவற்றில் இடம் பிடித்தார்.

அவர் தொடர்ந்து 5 மணி நேரம் செய்தித்தாள் வாசித்தார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் இச் சாதனை புரிந்தார். இந்நிகழ்வானது முகவை மற்றும் will record நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் செயலர் தஹ்மிதா பானு முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில் செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது அப்பழக்கத்தை மீட்டெடுக்க மாணவி ஷாலினி இந்த சாதனை முயற்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மாணவி ஷாலினியின் இச்சாதனைக்கான அங்கீகாரத்தை Mugavai records மற்றும் will state records தலைவர் கவிஞர் கலைவாணி, செயலாளர் தஹ்மிதா பானு ஆகியோரிடம் இருந்து மாணவி ஷாலினி, பள்ளி தாளாளர் விஐயன் ஆகியோர் பெற்று கொண்டனர். செய்தித்தாளை 5 மணி நேரம் இடைவேளையின்றி உரக்க வாசித்து சாதனை புரிவது இதுவே முதல் முறை.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை புரிந்த மாணவி ஷாலினியை அனைவரும் பாராட்டினர். சாதனைக்கு வழிகாட்டியோர், துணை நின்றோர், ஆதரவு தெரிவித்த கல்வியியல் கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியருக்கு மாணவி ஷாலினி நன்றி கூறினார். தமிழக அளவில் முதல் முறையாக தனிநபராக தொடர்ந்து 5 மணி நேரம் செய்தி தாளை உரக்க வாசித்து மாநில அளவிலான WILL STATE RECORDSல் இடம் பிடித்த மாணவி ஷாலினி மேலும் பூரிப்படைந்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!