சாதனைக்கு வயசு ஒரு தடையில்லை.. அனைவரையும் வியக்க வைத்த 5 வயது மாணவன்..

கீழக்கரை அல் பைய்யினா பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் மாணவன் 5 வயது நிரம்பிய கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த முஹம்மது இசாக். இந்த நவீன உலகில் மொபைலிலும் கணணி விளையாட்டுகளிலும் மூழ்கி இருக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் இந்த இளம் வயதில் 217 வகையான கடல் சிப்பிகளை சேகரித்து மற்றவர்களை ஆச்சிரியபடுதத்தியதுடம் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளான்.
இச்சிறுவனின் சாதனையை அங்கீகரிக்கும் வண்ணம் WILL  MEDALS KIDS RECORD எனும் நிறுவனம் இச்சிறுவனுக்கு கேடயம் மற்றும் சாதனை சான்றிதழ் வழங்கி கௌவரவித்துள்ளனர். இதற்கான பாராட்டு விழா இன்று (01/02/2018) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த இளம் வயதில் சாதனை படைத்த இச்சிறுவனை பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் மற்றும் பள்ளியின் முதல்வர் முஹம்மது ஹஃபீலா ஆகியோர் பாராட்டினை தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!