இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்
வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்
வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் நேற்று மாலை வருகை தந்தார். அப்போது அமைச்சருக்கு இன்பென்ட் ராஜ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் அஹ்மத் சாதிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரையில் நாளை ( இன்று 11-ம் தேதி) இளைஞர்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராகவும், மாநாட்டு தலைவராகவும் கலந்து கொள்வதற்காக நான் வந்திருக்கிறேன். மாநாட்டில் அதிக இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் அங்கீகாரம் (குரல் ) பெயரளவில் உள்ளது. அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பேசப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அது கிடப்பில் போடப்படுகிறது.
எனவே சமூகத்தின் மத்தியில் இளைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அரசியலை மையமாக கொண்டு நடக்கும் மாநாடு இது கிடையாது. இளைஞர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு நடக்கும் மாநாடு ஆகும்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை யூட்யூப், சோசியல் மீடியா போன்றவைகளில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில்
இலங்கையை பொறுத்தவரை இளைஞர்கள் காண பிரச்சனைகளை தீர்க்கப்படுவதற்கு இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுடைய கருத்துக்கள் அவர்களுடைய தேவைகளை பாராளுமன்றத்தில் பேசி நிரந்தர தீர்வு காண வழிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் இளைஞர் பாராளுமன்றம் எந்த தேசங்களில் இல்லையோ, அங்கெல்லாம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமாக உள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் 360 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 95 பேர் தமிழ் பேசக்கூடிய உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கையில் போர் (யுத்தம்)நடக்கும் போது இளைஞர்கள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு இளைஞர்கள் பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்துக்கு பிறகு பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் படிப்படியாக தரம் உயர்ந்து வருகின்றது.
எனினும் இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பலவீனங்கள் உள்ள வரும் காலங்களில் அது சீராக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையின் சகோதர நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை பொருளாதாரத்தில் சிக்கி தவித்தது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து இருந்து போது, இந்திய நாட்டில் இருந்து கொடுக்கப்பட்ட நிதி அதிகமாக இருந்தது. மேலும் இந்தியாவில் பல்வேறு வகையான உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இந்த உதவிகள் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக சீர் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் இருந்து இந்திய அரசாங்கத்தால் பல்வேறு உதவிகள் செய்து கை கொடுத்த நாடாக இந்தியா திகழ்ந்தது. இதில் பெரும்பாலான உதவிகளை இந்தியா தான் இலங்கைக்கு வழங்கியது.
மலையாள தமிழர்களுக்கான அங்கீகாரம் தற்போது தான் கிடைத்து வருகிறது. இவர்களுக்கான வாழ்க்கை தரம் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரம் காலத்தை பொறுத்தது. தேர்தல் காலம் வரும் போது சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியாக இருக்கும். தேர்தல் காலம் இல்லாத நேரத்தில் சிறந்த சமூகமாக சிறுபான்மை இனம் இருக்கும்.
இலங்கையில் நான்கு இன மக்கள் வாழ்ந்து வருகிறோம். தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு சில இன மக்களின் உரிமைகள் கேள்விக்குறியாக கருதப்படும்.
இலங்கை கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வரும் செயல் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. இந்த செயலை சுபமுகமாக தீர்வு காண தமிழக அரசிடம் இணைந்து ஒரு சிறந்த முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









