இன்று விஞ்ஞானம் வளர்ந்து வரும் நவீன உலகத்தில் ஒரு மனிதன் மனித உணர்வை விட சமூக வலை தளங்கள் மூலமாக எழுதுவதும், பேசுவதும் மட்டுமே நிஜ உலகம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறான். இதன் விளைவு ஆரோக்கியமாக வளர வேண்டிய உறவுகள் வேரோடு அழிந்து வரும் அபாயத்தின் உச்சி நிலைக்கு செல்கிறது என்பதை மனிதன் மறந்து விடுகிறான்.
இன்று பொதுவாக ஒருவர், மற்றவருடன் எதிர்மறையான கருத்துக்கள் கொண்டிருந்தால், அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வெளிப்படுத்த கூடிய ஆயுதமாகவே இந்த “STATUS MESSAGE” பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இன்று வருத்தப்படக்கூடிய சூழலாக உள்ளது.
நல் விசயங்கள் பரிமாறிக் கொள்வதும், நலம் விசாரிப்பதும் மனித வளர்ச்சியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது மாறி, இன்று ஒரு மனிதன் மற்றவனுடைய செயல்பாடுகளை அவன் சமூக வலைதளங்களில் பதியும் நிலைபாடை (STATUS) வைத்தே தீர்வுக்கு வரும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. நேரடியாக மனம் விட்டு பேசிய தருணங்கள் மறைந்து, இன்று சமூக வலைதளம் மட்டுமே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும் தளம் என்ற நிலைக்கு சமுதாயம் மாறியுள்ளது.
ஒருவன் நல்லுறவோடு இருக்கும் பொழுது விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் செயல்பாடுகள் கூட மன விரிசலில் இருக்கும் பொழுது துரும்பு போன்ற விசயஙகள் கூட பூதகரமாக வெடித்து இருந்து விரிசலையும் நிரந்த பகையாக்கி விடுகிறது.
இந்த பூகம்பத்தை உருவாக்கும் விசயத்தில் இன்று சமூக வலைதளங்களில் பதியப்படும் நிலைப்பாடுகளும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது என்றால் மிகையாகாது. சாதாரணமாக பதியும் விசயங்கள் கூட மன விரிசலில் இருக்கும் பொழுது எதிர்புறம் உள்ள மனிதனை அந்த பதிவு தனக்காகத்தான் என்ற மன நிலையை உருவாக்கி இல்லாத ஒரு பகைமையை வளர்த்துக் கொள்ள வைக்கிறது. இதுதான் யதார்த்தமான நிலை என்றாலும் சில சமயங்களில் அதையே சாதகமாக்கி தன்னுடைய அன்றாட செயல்பாட்டை அடுத்தவர்களின் மனதை வயது வரம்பு இல்லாமல் காயப்படுத்துவதற்கு ஆயுதமாக்கி, இல்லாத ஒரு பகைமையை செயற்கையாகவே உருவாக்கி விடுகிறது.
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “அவசரத்தில் எழுபவன் நஷ்டத்தில் அமர்வான்” போன்ற பழமையான வார்த்தைகள் இன்று நவீன வலைதளங்களில் உருவாகி வரும் நிலைபாட்டால் ஏற்படும் பகைமையே ஒரு உதாரணம் என்பதில் ஐயமில்லை.
இன்று ஆத்திரத்தில் பதியப்படும் “STATUS MESSAGE”, பிற்காலத்தில் உறவு மேம்படும் பொழுது உண்டாக்கும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு உங்கள் அடுத்த வன்மமான “STATUS MESSAGE” போட தொடங்குங்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












