உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார்.
குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பொது மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான கள நிலவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளபடியே தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘9585994700” என்ற எண்ணில் வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்தப்பட்டு அதில் மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட இயக்குநர், குடிநீர் விநியோகத்தை செயல்படுத்தக்கூடிய அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுட வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பொது மக்கள், பிறதுறை அலுவலர்கள் மற்றும் நீரியல் ஆர்வளர்களால் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை சம்பந்தப்பட் புகார்தாரருக்கு இந்த வாட்ஸ்அப் குரூப் வாயிலாகவே தெரிவித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். நிச்சயமாக இதுபோன்ற மாவட்ட தலைவரின் செயல்பாடுகள் வரவேற்க கூடியதாகவும், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









