இன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு…

Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் மனிதன் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது. உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது சுமார் 10000 ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை. நெருப்பில் சமைத்து உண்பதிலிருந்து, அரிசி, பருப்பு, பிஸ்ஸா, கோலா, ப்ரோட்டீன் பானம் வரைக்கும் பசியை மூலதனமாக வைத்து ருசியை விற்க ஆரம்பித்து இன்றைக்கு அசால்ட்டாக இன்சுலினை வயிற்றில் குத்திக்கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு முன்னேறி (?) இருக்கிறோம்.
மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இன்றைய உணவுகளில் 99% இல்லை. எனில் அவர்கள் என்ன உண்டு உயிர்வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஏன் அந்தக் கேள்வி எழவேண்டும்? அதனால் நமக்கு என்ன லாபம்?ஏனென்றால், அவர்கள்தான் நாம் இன்றைக்கு உயிரோடு இருக்கக் காரணமான நமது முன்னோர்கள். அவர்கள் அன்றைக்கு எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழ்ந்திருக்காவிட்டால், மனித இனமே பூண்டோடு அழிந்திருக்கும். இன்றைக்கு இதைப் படிக்க நீங்களோ, எழுத நானோ இருந்திருக்க வாய்ப்பில்லை. காடும், பனியும் நிறைந்த உலகத்தில், நெருப்பு என்றால் கூட என்னவென்று அறியாத மனித சமூகத்திற்கு, ரிலையன்ஸோ, ஸ்பென்ஸர்ஸ் கடைகளோ இல்லை, அவர்களுக்கான உணவை அவர்கள்தான் வேட்டையாடி பச்சையாக உண்டு உயிர்வாழ்ந்தார்கள். சிகப்பு மாமிசம் தவிர்த்து மிஞ்சிப்போனால் சில கிழங்குகளோ, பழங்களோ அவர்களுக்கு உணவாக சீசனில் கிடைத்திருக்கலாம், எவை உண்ணத் தகுந்தவை என்று அவர்கள் குரங்குகளின் மூலம் அறிந்திருக்கலாம், அவ்வளவே. ஆக, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டு உயிர்வாழ்ந்து மனித இனத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் வரை வாழவைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், முக்கிய உயிர் வாழும் உணவாக அன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்தது நல்ல ஆரோக்கியமான சுத்தமான உயர் மாமிசக் கொழுப்பு.
ஆமாம், எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து இறந்துவிடுவீர்கள் என்று உங்களுக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவைக் கூட தூக்கிப் போடச் சொல்கிறார்களோ அதே கொழுப்புதான். ஆச்சரியமாக இருந்தாலும் நமது ஜீன்கள் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்திய தானியங்கள் கொழுப்புடன் சேர்ந்து செய்த கொடுமைகளுக்கெல்லாம், கொழுப்பு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு படாத பாடு படுகின்றது.
உடல் இயக்கத்திற்கான சக்தி:
உடல் இரண்டு வகையான எனர்ஜி சோர்ஸ்களில் இயங்குகிறது. ஒன்று க்ளுக்கோஸ் மற்றது கொழுப்பு. இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுவகைகளைப் பட்டியலிட்டால் நாளொன்றுக்கு எவ்வளவு க்ளுக்கோஸ் சார்ந்த உணவுகளை சகட்டுமேனிக்குச் சாப்பிட்டு சைலன்ட்டாக கையைக் காலைக்கூட ஆட்டாமல் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்கிறோம் என்பது தெரியும். கார்போஹைட்ரேட், பழச்சர்க்கரைகள், வெள்ளைச் சர்க்கரைகள், கோலாக்கள், இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், ஜன்க்புட் எனப்படும் குப்பை உணவுகள் என்று இது பெரிய பட்டியல். மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. ஆமாம், உடலுக்கு க்ளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால் அது உயிர்வாழ தேர்ந்தெடுக்கும் மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவில் க்ளுக்கோஸ் அதிகமானால் உடலானது கொழுப்பை பத்திரமான வயிற்றைச் சுற்றி டயராக சேமித்துவிட்டு க்ளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்திற்கான சக்தியாக எடுத்துக்கொள்கிறது.
உங்கள் ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருப்பின் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது முக்கிய எனர்ஜிக்கான சோர்ஸாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எனர்ஜிக்கான சோர்சாக எடுத்துக்கொள்ளும், எனில் அந்த 300 கிராம் கொழுப்பு என்னாகும்?. அழகாக அதை நமது வயிற்றைச் சுற்றி சேமித்து வைக்கும், நாமும் அதற்கு தொப்பை என்று பெயரிட்டு அழைப்போம். உணவு சார்ந்த உடல் பருமனின் முக்கிய காரணி இதுதான். உடல் பருமன் மட்டுமல்ல, அதிகமாக ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் க்ளுக்கோஸ் மிகை உணவுகளால், இன்சுலின் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிகப்படியான மக்கள் டயபடிக் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகளாகவும் ஆவதற்கான காரணமும் இதுதான்.
எனில் உடல் பருமன் வராமல் தடுக்க, சர்க்கரை நோயாளியாகாமல் இருக்க என்ன ஆரோக்கியமான சாப்பிடுவது?
அதற்கு ஒரே வழி நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உண்டு உயிர் வாழ்ந்து நமது இனத்தையே காப்பாற்றிய உயர் கொழுப்பு உணவுகள்தான். அதைத்தான் பேலியோ டயட் அல்லது கேவ்மென் டயட் என்று அழைக்கிறோம். நெருப்பு கூட கண்டுபிடிக்கமுடியாத, காட்டுமிராண்டி காலத்து உணவை இன்றைக்கு எப்படி உண்பது? ஆமாம், அது உண்மைதான், நாம் வேட்டையாடி, பச்சை மாமிசம் உண்ணமுடியாது. ஆனால் அந்த உணவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு அதன்படி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உண்ணலாம்.
அதென்ன உண்மையான உணவுகள்? ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயணங்கள் கலப்பில்லாத, ஆரோக்கியமான தானியங்கள், கார்ப்போஹைட்ரேட் தவிர்த்த, கொழுப்பு சார்ந்த உணவுகளே உண்மையான உணவுகள்.
இந்த பேலியோ உணவுமுறையின் அதிர்ச்சிகள்: இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.- அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)

- கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
- மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
- பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
- பழங்கள் / ஜூஸ்.
- அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
- தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
- ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
- பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
- ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
- ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
- அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
- அனைத்து வகை பருப்புகள், புளி.
- அனைத்துவகை சோயா பொருட்கள்.
- காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.
- கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
- பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
- மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
- கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
- அனைத்துவகை கடல் உணவுகள்.
- நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
- செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
- அனைத்துவகை கீரைகள்.
- காளிபிளவர்
- பிராக்களி
- முட்டைகோஸ் முள்ளங்கி
- பாகற்காய்
- காரட்
- பீட்ரூட்
- தக்காளி
- வெங்காயம்
- வெண்டைக்காய்
- கத்திரிக்காய்
- சுண்டைக்காய்
- வாழைத்தண்டு
- அனைத்துவகைகீரைகள்
- முருங்கை
- ஆஸ்பாரகஸ்
- ஆலிவ்
- செலரி
- வெள்ளரி
- ஸுக்கனி
- காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
- பச்சை, சிகப்பு மிளகாய்
- பூசணி
- காளான்
- தேங்காய்
- எலுமிச்சை
- பூண்டு
- இஞ்சி
- பெரிய நெல்லிக்காய்
- அவகோடா எனும் பட்டர் ப்ரூட்
- கொத்தமல்லி
- மஞ்சள்கிழங்கு
- பீர்க்கங்காய் புடலங்காய் சுரைக்காய்
- மரவள்ளி
- சர்க்கரைவள்ளி
- உருளைகிழங்கு
- பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
- சென்னா
- சுண்டல்
- பருப்புவகைகள் அனைத்தும்
- பயறுவகைகள் அனைத்தும்
- நிலக்கடலை
- சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர் *சோயா எந்தவடிவிலும் ஆகாது*
- அவரைக்காய் பனங்கிழங்கு
- பலாக்காய்
- வாழைக்காய்
- பழங்கள் அனைத்தும்.
பேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன? முதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம். அதன்பின் மறைந்துவிடும்
பேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை? பட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும் குறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம். கொழுப்பை சாப்பிட பயப்டுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்
எத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்? துவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்.
Source: tamilpaleo.wordpress.com & paleogod.BlogSpot.in


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










பேலியோவில் அவகடோ மற்றும் கொய்யா தவிர எந்த பழமும் பரிந்துரைப்பதில்லை.