இராமநாதபுரம், நவ.4 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன், துவக்கி வைத்து நடை பயிற்சியில் பங்கேற்றார்.
நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் 8 கிமீ தூரம் பாதை தேர்வு செய்யப்பட்டு, நடைபயிற்சி துவங்கி வைக்கப்பட்டது. பொதுமக்களிடையே உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்கம் மாறுதல் அதிகரிப்பால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
60 வயது மேற்பட்டவர்களிடம் காணப்பட்ட உயர் ரத்த அழுத்தம் தற்பொழுது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் நடை பயிற்சி இன்றியமையாததாகும். நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சீராக வைத்துக் கொள்ளவும், சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார், இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.