நகொசுக்களால் பரவும் நோய்களை ஒழிக்க பொது சுகாதாரத்துறை மூலம் கடலாடி வட்டாரத்தில் சின்ன ஏர்வாடி கிராமத்தில் வீடுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பு பணி நேற்று துவங்கியது. கிராமப்பகுதிகளில் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, மேலும் யானைக்கால்நோய், மூளைக்காய்சல் நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்க்காக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மூலமாக வீடுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கும் பணி ஏர்வாடி அருகே உள்ள சின்ன ஏர்வாடி கிராமத்தில் துவங்கியது.
இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் ஆலோசனையின்படி பரமக்குடி சுகாதார மாவட்ட பூச்சியியல் அலுவலர் கண்ணன் தலைமையில் ஒரு மாதம் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணி இன்று (01/06/2019) துவங்கியது. இப்பணியில் இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகரன், சுப்பிரமணியன், கோவிந்தகுமார், சுரேஷ்பாபு, ராஜகோபால், பாலமுருகன், நாகார்ஜீன் மற்றும் மருந்து தெளிப்பு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளின் உள்பகுதியில் இம் மருந்துகள் தெளிப்பான்கள் மூலம் தெளிப்பதால் பொதுமக்கள் சுகாதர பணியாளர்களுக்கு ஒத்துழைத்தும், வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை மூடி வைத்தும் மழை நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தியும். யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறவும் வேண்டுமென சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














