இந்திய வெல்ஃபேர் கட்சியின் தேசியத் தலைவரும் ஜங்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான
டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இலங்கைத் தீவைத் தாக்கிய அந்த தற்கொலைத் தாக்குதலில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளனர்., 450 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எட்டு தொடர் குண்டுவெடிப்புகள் மனிதநேயத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக கருதப்படும்.
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை வளர்த்துவதற்கும் , இலங்கையில் சமூக பிளவை தூண்டுவதற்கும் இந்த சம்பவம் துணை போகும் என அவர் தெரிவித்தார். ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட வேளையில் இறந்த மற்றும் காயமடைந்த கிறிஸ்துவர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்ததுடன் அவர்களோடு என்றும் தாம் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நம்மை பிரிக்கும் நோக்கத்துடன் இதற்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்களை தோற்கடிக்கும் வகையில் சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பாவி மக்களை பாதிக்கும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் – புல்வாமா தாக்குதல் மற்றும் நியூசிலாந்து தாக்குதல் உட்பட – புலனாய்வு துறையின் தோல்விகளையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதிகள் மதம் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் மனித இனத்தின் எதிரிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார். உலகை பயங்கரவாதத்திடமிருந்து விடுவித்து, இந்த பூமியை நிகழ்கால, எதிர்கால சந்ததிகள் நிம்மதியுடன் வாழும் சுவர்க்க பூமியாக மாற்றும் வகையில் சர்வதேச புலனாய்வுத்துறை செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











