தஞ்சையில் பாலதமிழ்செல்வன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்மீக செம்மல் ,மனிதநேய பண்பாளர் பாலதமிழ்செல்வன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், இரத்த தானம் வழங்குதல், முதியோர்களுக்கு உதவி , நலிவுற்ற ஏழைகளுக்கு தொழில் தொடங்க நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கும் அதே போல் இந்த ஆண்டு தஞ்சை மேம்பாலத்தில் உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை தமிழ் பாசறை நண்பர்கள் வண்டிக்காரத்தெரு எஸ்.கார்த்தி, மற்றும் ஜி.சின்னையா, கே.சரவணன், கே.வினோத், ஜி.சரவணன், எம்.அண்ணாமலை, ஜி.மகேஷ், எம்.அரவிந்த், வி.பிரபு, ஆகியோர் செய்திருந்தனர்.



You must be logged in to post a comment.