ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பல லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் கண்ணன் வழங்கினார். பாக்யநாதன், செந்தில்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் வருகின்ற ஜூலை 20ம் தேதி அறக்கட்டளையில் உள்ள 10834 உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் மிகப்பெரிய விழா இராமநாதபுரத்தில் நடைபெறும் என்றும், அதற்கான முன்னோட்டமே இன்றைய நிதி உதவி விழா எனவும், தந்தையை இழந்து தந்தையின் கணவை நிறைவேற்ற துடிக்கும் மாணவி ஆர்த்தியின் கல்வி செலவிற்காக உதவிகள் தொடரும் என்று அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









