உலக அமைதிக்காக 15ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உபி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு  மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார்  சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து  பாராட்டினார்.

உத்திரபிரதேச மாநிலம் ஜோன்பூரை சேர்ந்தவர்   வீரேந்திர குமார் மோரியா வயது 32. உலக அமைதிக்காகவும், போதை பொருள் இல்லா உலகம் உருவாகவும் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 12 ஜோதி லிங்க தரிசனம் சைக்கிள் பயணத்தை செப்டம்பர் எட்டாம் தேதி உத்திரப்பிரதேசம் ஜோன்பூரி ல் துவங்கினார். இவர் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், ஜார்கண்ட் பாபா போல்நாத் ஒடிசா ஜெகநாத் பூரி கோவில், ஸ்ரீசைலம், திருப்பதி சிதம்பரம் தஞ்சாவூர் ராமேஸ்வரம் வழியாக மதுரை வந்தார். மதுரை சைக்கிள் இளைஞருக்கு  முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தன மாலை பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினார். மதுரை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முன்னிலை வகித்தார். சைக்கிள் இளைஞர் இங்கிருந்த அவர்  கோவை ஈஷா பவுண்டேஷன் சென்று சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெறுகிறார். அங்கிருந்து மும்பை குஜராத் மத்திய பிரதேசம் டெல்லி வழியாக ஏப்ரல் மாதம் கேதார்நாத் பத்ரிநாத் அயோத்தியா ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார். இதுவரை 4000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!