நல்லாசிரியர் விருது பெற்ற கடையநல்லூர் உலகாபள்ளி தலைமை ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு..

நல்லாசிரியர் விருது பெற்ற கடையநல்லூர் உலகா பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் உலகா மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும் தலைமை ஆசிரியருமான சண்முகசுந்தரம் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நல்லாசிரியர் விருது வழங்கினார்.

விருது பெற்று கடையநல்லூர் திரும்பிய நல்லாசிரியர் சண்முக சுந்தரத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ராமலட்சுமி, இப்ராஹிம், பாக்கியலட்சுமி, சுதாகர், கமர்நிஷா, கல்யாண குமாரி, ராஜாமணி, செல்வம், வேந்தன், தேன்மொழி, சுப்பிரமணியன், பொன்னுசாமி, சண்முகசுந்தரி, சரவணகுமார், செல்வ மகேஸ்வரி, சுப்புலட்சுமி, மேகலா, பரக்கத் நிஷா, மாரி, ஜெயக்குமார், இசக்கி பாண்டி, பிரபா, மகேஸ்வரி, மாலதி, கலா, சங்கவி, மதன் முருகன், சக்தி குமார், மணிமாறன், வசந்தி, லட்சுமி காந்த், ஸ்டாலின், திருப்பதி, சித்ரா உட்பட அனைத்து ஆசிரியர்களும் சிறப்பான வரவேற்பளித்தனர். கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரின் வீட்டிலிருந்து தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பீடர் சாலை வழியாக வெடி வெடித்து மாலை அணிவித்து மலர் தூவி அழைத்து வந்தனர். அப்போது கடையநல்லூர் பத்திரிகையாளர்கள் தமிழ் முருகேசன், குறிச்சி சுலைமான், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!