தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னப்பன் சென்னையில் இருந்து இன்று விளாத்திகுளம் வந்தார். அவருக்குவிளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அதிமுக வேட்பாளர் சின்னப்பன் போசும்போது., எம்.ஜி.ஆர்,ஜெ.வின் ஆசியோடும் அதிமுகவின் காவல் தெய்வாமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர் ஆசியோடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியுடன் பிரதமர் மோடி,பாட்டாளி மக்கள் கட்சி
நிறுவனர் ராமதாஸ்,தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆசியுன் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றார். மேலும் தூத்துக்குடி பார்லி தேர்தலில் போட்டியுட உள்ள எங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.,வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜனுக்கு விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளரை விட 50 ஆயிரம் வாக்கு அதிகம் பெற்றுதருவோம் என்றார்.
மேலும் நான் வெற்றிபெற்று விளாத்திகுளம் கண்மாய் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வைப்பாற்று பகுதிக்கான ஆற்றங்கரை கிராமத்திலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு விளாத்திகுளம் கண்மாய்,கீழ விளாத்திகுளம், குறளையம்பட்டி, வேடபட்டி,பல்லாகுளம் மேல்மாந்தை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். வெம்பக்கோட்டை மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் வைப்பாற்றில் அணைகளால் கடைமடை கிராமம் வரை தண்ணீர் செல்வது இல்லை ஆகையால் மழை காலங்ளில் கடைமடை வரை தண்ணீர் சென்ற பின்புதான் அணை மூடப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி தருவேன். நாகலாபுரம் பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன், விளாத்திகுளத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன்,விவசாயிகளுக்கு விலை பொருட்களை வைப்பதற்கு குளிர்பதன கிடங்கு ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதன் பின்பு அதிமுக வேட்பாளர் சின்னப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில் விளாத்திகுளம் தொகுதி அதிமுகவின் எக்கு கோட்டை, கடந்த 10 தேர்தல்களில் 8முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன், அந்த காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடைக்கோடி தொண்டனையும் நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றி பெறும்,நான் அன்பானவன், பண்பானவன், அமைதியானவன், எல்லோரிடம் நன்கு பழக கூடியவன், அன்பு, அகிம்சை பற்றி தான் எங்கள் தலைவாகள்; சொல்லி கொடுத்துள்ளனர், மிரட்டுகின்ற தோணியில் பேசுகின்ற பழக்கம் கிடையாது, நிச்சயமாக விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிக்க உள்ளேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,புதூர் ஒன்றிய செயலாளர் ஞான குருசாமி, நகர செயலாளர்கள் நெப்போலியன், ஆழ்வர் உதயகுமார், தனஞ்செயன்,குட்லக் செல்வராஜ்,பாபு செல்வக்குமார், பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, தேமுதிக ஒன்றிய செயலாளர்கள்,தங்கச்சாமி, ஆறுமுகபெருமாள் மற்றும் பாமக,புதிய தமிழகம் தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









