நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிக்கையில், தெற்கு இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. (23.11.2025) இன்று மாலை அல்லது இரவு முதல் மீண்டும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும். வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர், நாகை, மயிலாடுதுறை, இராமநாதபுரம்,, தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். நெல்லை மலைப் பகுதிகளில் இன்றும் அதி கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. குமரி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிகமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 256 மிமீ மழையும், ஊத்து பகுதியில் 250 மிமீ மழையும் பதிவாகியுள்ளது என வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.