திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதியில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் வெயில் இல்லாத குளிர்ந்த சூழல், வானம் எப்போதும் மேக மூட்டம், அவ்வப் போது மழை போன்ற அழகிய சூழல் நிலவுகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் இன்று வரை கடந்த 15 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள வேண்டாம். மாஞ்சோலை மலைப் பகுதிகளில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.