நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைய உள்ளது என தென்காசி வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்யும்.
குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு மழை உச்சபட்ச தீவிரமடையும். மாவட்டத்தின் பல இடங்களில் மிக கனமழையும், திருச்செந்தூர், குலசேகர பட்டினம் காயல் பட்டினம், தூத்துக்குடி, இராம நாதபுரம், இராமேஸ்வரம், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் 200 மிமீக்கு மேல் பெருமழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதிகளில் தொடர்ந்து வலுவாக மேகங்கள் இரவு முழுவதும் உருவாகி கொண்டே இருக்கும். இதனால் தென் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, நாகப் பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை தொடரும். நாகை மாவட்டத்தில் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.