தென்காசி மாவட்டத்தில் வலுவான மழை; வெதர்மேன் ராஜா தகவல்..

தென்காசி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் தரைக் காற்றுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் வலுவான மழையை சந்திக்கும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில், திருவேங்கடம், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், வீ.கே.புதூர், சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, மேக்கரை, பண்பொழி மற்றும் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளான கடையம், ஆழ்வார் குறிச்சி, பொட்டல் புதூர் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 27, 28, மார்ச் 01 ஆகிய தேதிகளில் கோடைகால மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பதிவாகும். பகலில் வெயில் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் மழை பதிவாக உள்ளது.

 

இந்த மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான தரைக்காற்று வீசும். இடி மின்னல் தரைப் பகுதியை தாக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும். குற்றாலம் நிலவரத்தை பொருத்தவரை கடந்த மூன்று வாரமாக மழை இல்லாத காரணத்தால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. பிப்.27, 28, மார்ச் 01, 02 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்கும். ஒரு சில நாட்களில் அருவிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

நீண்ட கால வானிலை அறிவிப்பை பொறுத்த வரை, தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மழை அதிகமாக பதிவாகும். அடுத்த மூன்று மாத வானிலை அறிவிப்பை பொறுத்த வரை தென்காசி மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!