தென் மாவட்டங்களில் இன்று (04.05.2025) கடுமையான வெயில் சுட்டெரிக்கும் எனவும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும். தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக புழுக்கம் காணப்படும். எனவே இன்று நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். விருதுநகர், மதுரை சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று வெயில் கடுமையாக இருக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்