தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், வட மாவட்டங்களில் இன்று 103°F வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டிலும் இன்று வெயில் சுட்டெரிக்கும்.
குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகரிக்கும். பகல் நேர வெப்ப நிலை அதிகரித்தாலும் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.